‘Friends’ பிரபலம் மேத்யூ பெர்ரி மரணம் – பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அவருக்குப் போதைப் பொருளைத் கொடுத்ததாக ஐவர் மீது குற்றச்சாட்டு.

அமெரிக்காவின் பிரபலத் தொலைக்காட்சி நடிகர் மேத்யூ பெர்ரி (Matthew Perry) மரணம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

54 வயது பெர்ரி, லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) நகரில் இருக்கும் அவரது வீட்டின் நீச்சல் குளத்தில் கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் இறந்து கிடந்தார்.

அவரது ரத்தத்தில் ketamine போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக இருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.

அவர் போதைக்கு அடிமையாக இருப்பது தெரிந்தே, பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அவருக்குப் போதைப் பொருளைத் தந்ததாக இரண்டு மருத்துவர்கள், நடிகரின் உதவியாளர் உள்ளிட்ட ஐவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.

பெர்ரி Friends தொலைக்காட்சித் தொடர் மூலம் உலகம் முழுதும் ரசிகர்களைப் பெற்றிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.