உலகிலேயே ஆகச் சுத்தமான குடிநீர் தரும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூருக்கு முதலிடம்!
உலகிலேயே மக்களுக்கு ஆகச் சுத்தமான குடிநீர் தரும் நாடாகச் சிங்கப்பூர் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
அது மொத்தம் 99.9 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது.
அந்தப் பட்டியலை Yale பல்கலைக்கழகம் வெளியிட்டது.
மொத்தம் 180 நாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டன.
அசுத்தமான குடிநீர் அருந்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கருத்தில்கொண்டு நாடுகள் மதிப்பிடப்பட்டன.
2022ஆம் ஆண்டில் சிங்கப்பூர் 21ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.
Yale பல்கலைக்கழகம் ஈராண்டுக்கு ஒருமுறை அந்தப் பட்டியலை வெளியிடுகிறது.
“குழாயிலிருந்து கிடைக்கும் நீர் ஆகத் தரமானதாக இருந்தாலும்கூட சிங்கப்பூரர்களில் பலர் அதனைக் கொதிக்க வைத்த பின்னரே குடிக்கின்றனர். அதனால் குடிநீரிலிருந்து மேலும் பல ரசாயனங்களும் கிருமிகளும் நீக்கப்படுகின்றன,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.