ரணிலுடன் இணைந்த மொட்டு எம்.பிக்களின் 92 ஆசனங்கள் இரத்து.. விருப்பப்பட்டியலில் அடுத்த வேட்பாளர்களை தேடும் படலம் ஆரம்பம்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் திரண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு கட்சி செயற்பட்டு வருகிறது.
அந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிடுகின்றார்.
இதுபற்றி ஏற்கனவே கடிதம் அனுப்பி வருவதாக பொதுச்செயலாளர் சகரகரியவாசம் தெரிவித்தார்.
ஒழுக்காற்று விசாரணைகளின் பின்னர் அவர்கள் எம்.பி பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்காமல் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த தீர்மானம் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
92 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவர்கள் நீக்கப்பட்ட பிறகு, மாவட்ட முன்னுரிமைப் பட்டியலில் அடுத்த வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சி உத்தேசித்துள்ளது.