ரணிலுக்கு ஆதரவு தர வந்தவர்கள் பணம் கேட்டு தொல்லை!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அதிகமாக பணம் கோருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரசாரம் செய்வதற்கு அவசியமான செலவுகள் எனக் கூறுயே கேட்கின்றனர்.
ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் தேர்தல் அலுவலகம் போன்றவற்றுக்கு அடிக்கடி சென்று கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
அத்தோடு, ஜனாதிபதியின் தேர்தல் நடவடிக்கைக் குழுக்களுக்கு பணக் கோரிக்கைகள் மூலம் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
எனினும் இவர்களுக்கு ஜனாதிபதியினால் பெரும் தொகை வழங்கப்படவில்லை. இவர்களது நோக்கமே அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு பணம் சேகரிப்பதேயன்றி , ஜனாதிபதி தேர்தலுக்கு பணம் செலவழிப்பதற்கு அல்ல என்ற சந்தேகமே இதற்கு காரணம்.
ஆனால் இந்தக் குழுவைக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்த விரும்புவதால், ஓரளவு பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.