நான் கட்டியெழுப்பும் நாடு – தொழிநுட்பப் புரட்சியை உருவாக்கி வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, இளைஞர்களை விவசாய தொழில் முனைவோர்களாக்கும்.. நாமல் ராஜபக்ச

தான் வெற்றிபெற்றதன் பின்னர் இந்த நாட்டில் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தி நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து இளைஞர்களை விவசாய தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை (16) பிற்பகல் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தனது அரசாங்கத்தின் கீழ் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டில் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்துவோம், இளம் தொழில் முனைவோரை உருவாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என மக்களுடன் பிரதான வீதியில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்ற நாமல் ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.