ஹிருணிகாவுக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கேட்கும் பெண்கள் அமைப்புக்கள் …
தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கு பதிலாக இளைஞர்களின் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஹிருணிகா பிரேமச்சந்திரவை நியமிக்குமாறு SJBயுடன் இணைந்துள்ள பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் ஆசனங்கள் பறிக்கப்பட்டதுடன், ஹரின் பெர்னாண்டோவின் தேசியப் பட்டியல் ஆசனம் தற்போது வரை வெற்றிடமாகவே உள்ளது.