வாகனங்கள் இறக்குமதிக்கு தயார்

எதிர்வரும் காலங்களில் வாகன இறக்குமதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் வாகன இறக்குமதி வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நாட்டின் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு, வாகன இறக்குமதி வரியை திருத்துவதற்கு அரசாங்கம் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த வரியானது பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க விகிதங்களுக்கு ஏற்றவாறு திருத்தப்பட்டுள்ளது.

எனினும் அத்தியாவசிய வாகனங்களை மட்டும் இறக்குமதி செய்வதிலேயே அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டு தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதாக இருந்தால் முதலில் 1000 இஞ்சின் திறன் கொண்ட சிறிய வாகனங்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.