இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை நேற்று (18) தீர்மானித்தது.

கொட்டகலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தேசிய சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எதிர்காலத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களாக இந்த நாட்டில் நிலவி வந்த பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கும், மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், காணி உரிமைகளை வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்ததன் காரணமாகவே தேசிய சபை இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.