ஜெர்மனி ராட்டினத்தில் தீ – 20 பேர் காயம்

ஜெர்மனியில் சுழலும் ராட்டினம் தீப்பிடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Leipzig நகரில் நேற்றிரவு நடந்த Highfield இசை நிகழ்ச்சியின்போது (17 ஆகஸ்ட்) அந்தச் சம்பவம் நேர்ந்ததாக அந்நாட்டுக் காவல்துறைப் பேச்சாளர் கூறினார்.

ராட்டினத்தின் இரண்டு பகுதிகளில் மூண்ட தீ விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

சம்பவத்தில் நால்வருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டன. கீழே விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார். மேலும் 18 பேர் புகையைச் சுவாசித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரிகளுக்கும் தீயணைப்பாளர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டன.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.