ரணில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியிருந்தால் பத்து ரூபாய்க்கு முட்டை வாங்க முடிந்திருக்க வேணும் – .விஜித ஹேரத்
ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தை கட்டியெழுப்பினார் என்றால் இன்று ஒரு முட்டை பத்து ரூபாவிற்கு வாங்க முடிய வேணும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததும் ஒரு முட்டையின் விலை பன்னிரெண்டு ரூபாவாக இருந்த நிலையில் , இன்று அது ஐம்பத்தைந்து ரூபாவாக அதிகரித்துள்ளது என்றார்.
ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வரும் போது 950 ரூபாவாக இருந்த எரிவாயு இன்று நான்காயிரத்தை தாண்டியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அன்று ஒரு கிலோ அரிசி 80 ரூபாவாக இருந்ததாகவும், இன்று 220 ரூபாயை தாண்டியுள்ளதாகவும் தெரிவித்த அவர், அன்று 117 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் இன்று 340 ரூபாவாக காணப்படுகின்றது என்றார்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்பினால் பொருட்களின் விலையும் குறைய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிரிபத்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.