Sunday Observer ஆசிரியர் ராஜினாமா

சண்டே ஒப்சர்வர் ஆசிரியர் பிரமோத் சில்வா, பொறுப்பான அமைச்சரின் விவகாரங்களில் ஏமாற்றம் அடைந்து தனது ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் அரச ஊடகப் பொறுப்பாளர்களின் கூட்டத்தை மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் நடாத்துவதும், குறித்த நேரத்தை கடந்து மாலை வரை கூட்டத்தை ஆரம்பிக்காததும் குறித்து ஆசிரியர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரச ஊடகங்களில் அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தும் போதெல்லாம் கலாநிதி எனப் பயன்படுத்துவது கட்டாயம் என பாவிக்குமாறு கட்டளை இட்டுள்ளார்.

அனைத்து அரச ஊடகங்களும் தனது இரண்டு செய்திகளையாவது வெளியிட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினரை இலக்கு வைத்து குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கும், அமைச்சரின் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் பத்திரிகையின் பல அம்சங்களை தீர்மானிப்பதற்கும் எதிராக பிரமோத் சில்வா இந்த முடிவை எடுத்துள்ளார்.

முன்னதாக, DAILY NEWS பத்திரிகையின் ஆசிரியர் ஜெயந்த ஸ்ரீ நிஸ்ஸங்க, அமைச்சருக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது வேலையை விட்டுவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.