ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களுக்கு இடையே விவாதம்.. அனைத்து தொலைக் காட்சி சேனல்களிலும் நேரலை..
இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஆறு பிரதான வேட்பாளர்களின் பங்குபற்றுதலுடன் நேரடி விவாதம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பஃபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் 7 திகதி நேரடி விவாதத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிடுகின்றார்.
இந்த விவாதத்திற்கு ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுர திஸாநாயக்க, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, அரியநேத்திரன் ஆகிய வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனை அனைத்து இலத்திரனியல் சேனல்கள் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகள் ஊடாக நேரடியாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.