கொல்கத்தாவில் மருத்துவ சேவை பாதிப்பு- நோயாளிகள் கடும் அவதி!

பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்படுவதற்கு முன்பு தொடர்ந்து 36 மணி நேரம் ஓய்வின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால்,மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இந்த சம்பத்தை கண்டித்து கொல்கத்தாவில் உள்ள இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகின்றனர். இதனால், அங்கு மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

முன்னதாக பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்படுவதற்கு முன்பு தொடர்ந்து 36 மணி நேரம் ஓய்வின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கடமை ஆற்றி வந்த மருத்துவர்,பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும், கழுத்து, கால்கள் முறிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.