அநுரா ஜனாதிபதியாவது உறுதி : உடனே பாராளுமன்றத்தை கலைத்து 2/3 பலத்தை பெறுவோம்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க 50% அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக வருவார் என கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி. லால் காந்த குறிப்பிடுகிறார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் தற்போதுள்ள பாராளுமன்றத்தை கலைப்பதே முதல் கடமை என அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் வழங்குவார்கள் என்றும் அவர் கூறினார்.
கம்பளையில் தேசிய மக்கள் சக்தி நடத்திய ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.