மக்களை கஹட்ட அருந்தச் சொல்ல முடியாது என, திசைகாட்டியிலிருந்து ஒரு பலமான தூண் ரணிலுடன் சங்கமம் ..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட செயற்குழு உறுப்பினரும் கம்பளை தொகுதி அமைப்பாளருமான அனுஷா விமலவீர தீர்மானித்துள்ளார்.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அனுராத ஜயரத்ன மற்றும் கம்பளை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளர் சமந்த அருண குமார ஆகியோரை அனுஷா விமலவீர சந்தித்து தனது முடிவை அறிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பளை தொகுதிக் குழுக் கூட்டத்தில் அனுராத ஜயரத்னவும் கலந்துகொண்டார்.

அங்கு உரையாற்றிய அனுஷ விமலவீர, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தியிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை என்பதாலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகத் தெரிவித்தார்.

காலை வேளையில் பால் அருந்துபவர்களை கஹட்ட (சீனி இல்லா தேனீர்) குடிக்க தயாராகுங்கள் என்று கூறும் அரசியல் முகாமில் தங்கியிருந்து பயனில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.