கிளப் வசந்தா கொலையின் வாடகைக் கொலையாளிகளில் ஒருவர் கைது.
கிளப் வசந்த கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரான 31 வயதான பட்டி அரம்பகே அஜித் ரோஹன என்ற வாடகைக் கொலையாளி (23) தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கௌடான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட , இந்த நபர் ராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் எனவும் , அவருடன் T-56 துப்பாக்கி மற்றும் 120 தோட்டாக்கள் மற்றும் 9mm பிஸ்டல் தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணையின் போது, பிடிபட்டது கிளப் வசந்தவை சுட்ட ஆயுதம் அல்ல என்றும், அந்த துப்பாக்கி மிகவும் பழமையானது என்றும் கொலையாளி கூறியுள்ளார்.
கொலைக்கான ஒப்பந்தத்தை இந்த கொலையாளிக்கு வெளிநாடுகளில் உள்ள கஞ்சிபானி இம்ரான் மற்றும் லொகு பெட்டி ஆகியோர் கொடுத்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், அதுருகிரிய பிரதேசத்தில் இருந்து வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பஸ்ஸில் கதிர்காமத்திற்கு அழைத்துச் சென்ற 29 வயதான தாருகார வருண இந்திக்க சில்வா என்பவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரையின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் தலைமையிலான குழுவினர் கொலையாளியை கைது செய்துள்ளனர்.