அநுர ஜனாதிபதியானாலும் , நாட்டை ஆளுப்போவது எமது குழு.. தனியொருவரால் அற்புதங்கள் நிகழ்த்த முடியாது – டில்வின் சில்வா

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் , அவரை முன்னால் விட்டு , யாரும் பின்னால் இருந்து நாட்டை ஆளமாட்டார்கள் எனவும் , அவர் சர்வாதிகாரியாக நாட்டை ஆளமாட்டார் எனவும் ஜனதா விமுக்தி பெரமுணையின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அநுர திஸாநாயக்க நாட்டின் ஜனாதிபதியாக ஆனாலும், நாடு ஒரு குழுவினரால் ஆளப்படும், இது ஒரு குழுவின் வேலை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனுர திஸாநாயக்க ஒருவரால் ஒரு பெரிய அதிசயத்தை நிகழ்த்த முடியும் என்று நம்பவில்லை என்றும் , அதேபோன்ற எண்ணத்தை அனுர திஸாநாயக்கவும் கொண்டுள்ளார் என , உபுல் சாந்த சன்னஸ்கலவுடன் இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

https://youtu.be/kPDCf2xlRpA?t=4335

Leave A Reply

Your email address will not be published.