அம்பாறை – கொழும்பு இரவு சேவை பேருந்தின் சாரதி ஆசனத்திலேயே மரணம் : பஸ் வீதியை விட்டு விலகி நின்றது.
நேற்று (23) இரவு, அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவு நேர விரைவுப் பேருந்தின் சாரதி இரவு 8.15 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சாரதி ஆசனத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஓடிக் கொண்டிருந்த பஸ் வீதியை விட்டு ஓடி நின்றதாக இகினியாகல பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 10 கிலோமீட்டர் தூரம் பேருந்தை ஓட்டுவதற்குள் ஓட்டுநர் இருக்கையில் உயிரிழந்தார்.
பேருந்தை ஓட்டும் போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் , வேறு ஒரு சாரதியை அழைக்க முடியாத நிலையில் , இரவு வெகுநேரம் பயணிகளை நிராதரவாக விட முடியாது என தெரிவித்த சாரதி , மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்ற பின் சுமார் 10 கிலோமீட்டர் தூரம்வரை பேருந்தை செலுத்துவதற்குள் , இருக்கையிலேயே உயிரிழந்துள்ளார்.
செய்திகளின்படி, சம்பவம் பின்வருமாறு.
நேற்று 23ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் அம்பாறை டிப்போவில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட பஸ் சாரதிக்கு ஏற்பட்ட , உடல் நலக்குறைவு காரணமாக இக்கினியாகல மகா வித்தியாலயம் அருகில் பஸ்ஸை நிறுத்திவிட்டு , அந்த இடத்தில் உள்ள தனியார் சிகிச்சை வைத்தியரிடம் மருந்து எடுத்துக் கொண்டு கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளார்.
உடல்நிலை மோசமாக இருப்பதால் பயணத்தை தொடர வேண்டாம் என மருத்துவர் அறிவுறுத்தியும், வேறு சாரதி இல்லை எனக் கூறிய சாரதி, பேருந்தை கொழும்பை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் மருத்துவரைச் சந்தித்த பின் 10 மைல் தூரம்வரையே சென்ற பேருந்து சாலையை விட்டு விலகி ஓடியுள்ளது.
பின்னர், சாரதியை உடனடியாக கிண்ணியாகலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படும் போது பேருந்தில் 40 பயணிகளே இருந்ததாக பேருந்தின் நடத்துனர் தாரக நுவன் தெரிவித்தார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இகினியாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.