அனுரவை ஆட்சிக்குக் கொண்டுவர ரணில் முயற்சிக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவை ஆட்சிக்கு கொண்டு வர முயற்சிக்கின்றார் என SJBயின் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளின் தலைவர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
வரக்காபொல பிரதேசத்தில் நேற்று (23) இடம்பெற்ற SJBயின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இன்று ரணில் எவ்வளவு அசிங்கமாக நடந்து கொள்கிறார் பாருங்கள். எங்கள் பழைய தலைவர். எம்.பி.க்களை இறக்க கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. ஒரு எம்.பி.க்கு 300 மில்லியன் , 3000 கோடி. எங்களின் வெற்றியைத் தடுக்க மேல் மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 300 கொடுக்கப்படுகிறது. வெற்றி பெற அல்ல.
அவர் என்ன திட்டமிடுகிறார்? முடிந்தவரை எங்களின் வெற்றியைத் தடுத்து, முடிந்தால் ஜே.வி.பி.யை ஆட்சிக்குக் கொண்டுவர முயற்சிப்பார். ஒரு நாட்டை வங்குரோத்து செய்துவிட்டு, பெட்ரோல், கேஸ் என்று மக்கள் மீண்டும் வீதிக்கு வருவார்கள் என நினைக்கும் ரணில், அதைவைத்து ரணில் மீண்டும் ஆட்சிக்கு வர நினைக்கிறார் .