நாட்டைக் காப்பாற்றிய தலைவருக்கு நன்றியை செலுத்த மக்கள் திரண்டு வருகின்றனர். – நிமல் லன்சா

வீழ்ந்த நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கி நன்றியை செலுத்த மக்கள் திரண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

திவுலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிமல் லான்சா இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த நிமல் லான்சா,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீழ்ந்த நாட்டை மீட்டெடுத்தார். யார் வீழ்த்தினார்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். நாடு வீழ்ச்சியடைய உதவுவதற்கு எவரும் இல்லாத நிலையில் ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார். சஜித் பிரேமதாச, அநுரகுமார முன்வராத போது ரணில் விக்கிரமசிங்க சவாலை ஏற்றுக்கொண்டார்.

எண்ணெய், மின்சாரம், உரம், மருந்து எதுவும் இல்லாத போது மக்களையும் நாட்டையும் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து அந்த வரலாற்றை சிலர் மறக்க முயல்கின்றனர். செய்ய ஒன்றும் செய்யாமல் கீழே வீழ்ந்து கிடந்த போது, ​​நாட்டை உயர்த்திய தலைவனுக்கு பிரதி உபகாரம் பண்ண வேண்டும்.

நாங்கள் வேண்டாம் என சொல்லியும் ஒரு நிகழ்வை மகிந்த இல்லத்தில் ஏற்பாடு செய்து மைனாகோ கிராமத்தைத் தாக்கச் சென்று நாட்டில் பெரும் அழிவை ஏற்படுத்தினான். அன்று ரணில் ராஜபக்ச எனக் கூறி சஜித் பிரேமதாசவால், இன்று அப்படிக் கூற முடியாது .

ராஜபக்சக்கள் வெற்றி பெறுவதற்காக இன்று தேர்தல் கேட்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க. இன்று ராஜபக்சக்கள் சஜித் பிரேமதாசவுக்கு உதவுகிறார்கள். ஜே.வி.பியினர் உதவுகிறார்கள்.

நாடு வீழ்ந்த வேளையில் மீட்டெடுத்த தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு எமது குழு உதவுகிறது. நம் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும். இன்று சஜித் பிரேமதாச ராஜபக்சவை குறை கூறவில்லை. ஜே.வி.பி ராஜபக்சவினரை குற்றம் சொல்லவில்லை. ரணில் விக்கிரமசிங்கவை குற்றம் சுமத்துகிறார்கள். இதற்கு காரணம் அவர்களது முக்கிய சவால் ரணில் விக்கிரமசிங்க என்பதுதான்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றியை செலுத்த மக்கள் இன்று வரிசையில் நிற்கின்றனர். இன்று அனுரகுமார , ராஜபக்ஷவுடன் டீல் செய்கிறார். சஜித் பிரேமதாச , ராஜபக்சவுடன் டீல் செய்தார். எங்கள் அணிக்கு எந்த அணியுடனும் டீல் இல்லை. எங்களின் தேர்தல் பிரச்சாரம் வேகமெடுத்து வருகிறது. ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்தை சுற்றி மக்கள் திரண்டுள்ளனர்”

நிமல் லான்சா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.