நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை : நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஊர்வசி.

கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து அண்மையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அறிக்கை வெளியானதற்கு பின் பல நடிகைகள் தாங்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக கூறி வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து, பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக அடுத்தடுத்து முக்கிய பதவிகளில் இருந்து நடிகர்கள் விலகி வருகின்றனர். இந்நிலையில், கேரள திரைத்துறையில் நடிகைகளிடம் அத்துமீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நடிகை ஊர்வசி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நிற்கிறேன். ஹேமா கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் கேரள திரைத்துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள், தவறாக நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும்,” என்றார் ஊர்வசி.

Leave A Reply

Your email address will not be published.