குஜராத்தில் நீடித்து வரும் கனமழையால் உயிரிழப்பு 26-ஆக அதிகரிப்பு
குஜராத்தில் நீடித்து வரும் கனமழையால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 26-ஐ தாண்டியுள்ளது.
குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து நான்கு நாள்களாக பெய்து வந்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள 24 ஆறுகள்; 137 நீா்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்து வருகிறது. அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்பட்டுத்தப்பட்டுள்ளது.
நவ்சாரி, வதோதரா மற்றும் கெடா உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 17 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்இதனிடையே செவ்வாய்க்கிழமை கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி 7 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தநிலையில், அந்த எண்ணிக்கை புதன்கிழமை 16-ஆக அதிகரித்த நிலையில், வியாழக்கிழமை 26-ஐ தாண்டியுள்ளது. இதனிடையே 5 நாள்களுக்கு அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வரும் மக்களை படகு மூலம் தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோரக் காவல்படையினர் இணைந்து மாநிலத்தில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வா் பூபேந்திர படேலிடம், ‘குஜராத்தில் கனமழை நிலவரம், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்த பிரதமா் மோடி, மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதி அளித்தார்.பட்டுள்ளனா்.