PAYE வரியை திருத்த IMF உடன் ஒப்பந்தம் – ஜனாதிபதி (Video)
சம்பாதிக்கும் போது செலுத்தும் வரி திருத்தம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் அஹலியகொடவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
“இன்னொரு பிரச்சனை நீங்கள் சம்பாதிக்கும் போது செலுத்தப்படும் வரி. அதுவும் ஒரு பெரிய பிரச்சனை. ஐஎம்எப் மற்றும் நாங்களும் அதை திருத்த வேண்டும் என்று ஒப்புக்கொண்டோம். அடிப்படை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு முன்மொழிவைச் செய்துள்ளோம், அவர்கள் மற்றொரு திட்டத்தை முன்வைத்துள்ளனர். எனவே இந்த இரண்டு முன்மொழிவுகளும் விவாதிக்கப்பட்டு, ஒரு உடன்பாட்டை எட்டியவுடன், சரியான தொகையை அறிவிப்போம் என்றார் ஜனாதிபதி.