யாழ். நகரில் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை. (photos)
யாழ். நகரில் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை (photos)
யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவின் ஏற்பாட்டில் யாழ். நகரப் பகுதி, மத்திய பஸ் நிலையம், தனியார் பஸ் தரிப்பிடம் மற்றும் யாழ். நகர வர்த்தக நிலையங்களுக்குக் கிருமித் தொற்று நீக்கி மருந்து விசிறும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.
கொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பமாகியுள்ள நிலையில் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவருக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையின்போது தொற்று உறுதியாகியுள்ளது. இந்தநிலையில், யாழ். நகரில் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.