Telegram செயலி உரிமையாளருக்குப் பிணை.
Telegram செயலியின் உரிமையாளர் பாவெல் டூரோவ் (Pavel Durov) 4 நாள் தடுப்புக் காவலில் இருந்தபின் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
அவர் பிரான்ஸைவிட்டு வெளியேறக் கூடாது என்பது பிணை நிபந்தனைகளுள் ஒன்று.
ரஷ்யாவில் பிறந்த 39 வயது பெரும் செல்வந்தர் டூரோவ், தீர்ப்பு வெளியானதும் அவசரமாகக் காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
Telegram செயலியில் தீவிரவாத, சட்டவிரோதத் தகவல்களை அவர் கட்டுப்படுத்தத் தவறினார் என்பதை ஒட்டிப் பல குற்றச்சாட்டுகளைச் சந்திக்கிறார்.
Telegramஐத் தற்போது 900 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது.
நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறிய ரஷ்யா, வழக்கை அரசியல் அடக்குமுறையாக மாற்ற
வேண்டாம் என்று பிரான்ஸுக்கு எச்சரிக்கை விடுத்தது.