ஜெர்மனியில் பேருந்துக்குள் பெண் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதல்.

மேற்கு ஜெர்மனியில் பேருந்தொன்றில் பெண் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் ஐவர் காயமடைந்தனர். அந்நாட்டில் கத்திக்குத்துத் தாக்குதல் நடந்து இப்போதுதான் ஒருவாரமாகியிருக்கும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிகென் (Siegen) என்ற நகரில் சம்பவம் நடந்தது. சந்தேக நபரான 32 வயதுப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கும் பயங்கரவாதத்துக்கும் தொடர்பிருப்பதாக அறிகுறி எதுவும் இல்லை.

காயமுற்ற ஐந்து பேரில் மூவர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். ஒருவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு லேசான காயம்.

ஆகக்கடைசியாக நிகழ்ந்துள்ள இந்த 2 தாக்குதல் சம்பவங்களை அடுத்து ஜெர்மானியப் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸின் (Olaf Scholz) அரசாங்கம் புதிய விதிமுறைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொது ஒன்றுகூடல், நீண்டதூரப் பயணம் ஆகியவற்றின்போது கத்தியை எடுத்துச்செல்வதன் தொடர்பில் அந்த விதிமுறைகள் அமைந்திருக்கும். அதேநேரம் கள்ளக் குடியேறிகளுக்கு எதிரான சில நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.