ரணில்-சஜித்தை இணைக்கும் நடவடிக்கை ஆரம்பம்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அணிகளை ஒன்றிணைக்கும் தீர்க்கமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரு கட்சிகளுடனும் இணைந்து செயல்படும் பலம் வாய்ந்த தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலர் இதற்கு முன்னுரிமை அளித்துள்ளனர்.
இதற்குக் காரணம், இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பது சதவீத வாக்குகளை எவராலும் பெற முடியாது என பல சர்வேகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியடையும் பட்சத்தில் அடுத்த அரசாங்கத்தின் உயர்மட்ட பதவிகள் சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் பிரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும், ஆனால் இது குறித்து அதிக தகவல்கள் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.