மரிக்கார் , ஜனாதிபதி சந்திப்பு கசிந்த வீடியோ.. வாகன பேர்மிட் தொடர்பான கலந்துரையாடல்.. [வீடியோ]

SJB கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன உரிமம் பெறுவது குறித்து மரிக்கார் விவாதிக்கிறார்.

எம்.பி.க்களுக்குக் கிடைக்கும் ஒரேயொரு பாக்கியம் என்பதால், அதில் கையெழுத்திடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கிறார்.

மிகவும் சிநேகபூர்வ கலந்துரையாடலின் போது ஜனதா விமுக்தி பெரமுனவின் முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்களின் சம்பளம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.