காங்கிரஸ் தலைவருடன் அட்ஜெஸ்ட் செய்தால் மட்டுமே பதவி; கேரளாவில் கிளம்பிய மற்றொரு பூதம்.
கேரள திரைத்துறையில் நடந்த பாலியல் குற்றங்கள் தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை வெளியீடு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு, கேரளா என ஒட்டுமொத்த திரையுலகினரும், ஹேமா கமிட்டி குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அஞ்சி ஓடுகின்றனர். கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏவும் நடிகருமான முகேஷ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் கேரளா காங்கிரசிலும் காஸ்டிங் கவுச் எனப்படும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் கீழ்த்தரமான நடைமுறை இருந்து வருவதாக அக்கட்சியின் பெண் நிர்வாகி சிமி ரோஸெபெல் ஜான் தெரிவித்துள்ளார். பெண்கள் கண்ணியம் மற்றும் மரியாதையுடன் காங்கிரசில் வேலை செய்ய முடியாது எனவும் குற்றம்சாட்டினார்.
கேரள காங்கிரசில் பெண் நிர்வாகிகள் உயர் பதவிக்கு செல்ல வேண்டுமென்றால், தங்கள் மீது நடத்தப்படும் அத்துமீறல்களை பொருத்து கொண்டிருக்க வேண்டிய சூழல் உள்ளது. மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவராக உள்ள VD சதீஷன் உள்ளிட்டோருக்கு ஏற்றவிதமாக நடந்து கொண்டால் மட்டுமே பெண்களுக்கு பதவி கிடைக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்தை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.