பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும்.
பொது மக்கள் கொரோனா பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும்
கிளிநொச்சி அரச அதிபர்
கிளிநொச்சி மாவட்ட மக்கள் கொரோனா பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளை
கண்டிப்பாக பின்பற்றி நோய் தொற்றிலிருந்து தங்களையும் பாதுகாத்து
சமூகத்தை பாதுகாக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி .ரூபாவதி
கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று(06) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும்
தெரிவிக்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக கிளிநொச்சி
மாவட்டத்தில் மூன்று குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு
உள்ளாக்கப்பட்டுள்ளதோடு, யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் 18
மாணவர்களும், கண்டாவளை வெளிக்கண்டல் இராணுவ முகாமில் மூன்று
இராணுவத்தினரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள்
அனைவரும் தொற்று ஏற்பட்டுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதன்
அடிப்படையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு இவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு மாதிரிகள்
பெறப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் நாளை(07) தெரியவரும் எனத் தெரிவித்த அவர் பொது மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை எனவும், தொடர்ந்தும்
சுகாதார நடைமுறைகளை பேணி வரும் முன் காக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்ப
வழங்குமாறும் மாவட்ட அரச அதிபர் கேட்டுள்ளார்.