வெளிநாட்டுக் கடன்களை நிறுத்துவதற்கு சகலரது ஆதரவையும் கோரிய ஜனாதிபதி.
இலங்கையானது ஏனைய நாடுகளிடம் கடன் வாங்குவதை நிறுத்தக்கூடிய யுகத்தை உருவாக்குவதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 73வது ஆண்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டுக் கடன் வாங்குவதை நிறுத்த வேண்டிய தருணம் இது என்றும், மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை தனது தேசத்தை பராமரிக்க தனது சொந்த பணத்தை சம்பாதிக்க ஆரம்பிக்க வேண்டும்… என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.