பாக்கு மரத்தில் இருந்து வீழ்ந்து சிறுவன் மரணம்.

பாக்கு மரத்தில் இருந்து தவறி கீழே வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பசறையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 16 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாக்கு மரத்தை வெட்டுவதற்காக மேற்படி சிறுவன் நேற்று மாலை பாக்கு மரத்தில் ஏறி நுனிப்பகுதியில் இருந்து மரத்தை வெட்டும் போது தவறி மரத்தில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார். அவர் பலத்த காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகப் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சடலம், பதுளை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளைப் பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.