ரணில் -அநுர புதிய உறவு குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரணில் அநுர உறவை அவதானிக்குமாறு, குளியாப்பிட்டியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்…
ரணில் விக்கிரமசிங்கவும், அனுரகுமார திஸாநாயக்கவும் தோற்கடிக்கப்படுவார்கள் அல்லது நாட்டைக் கட்டியெழுப்பும் ஒன்றுபட்ட மக்கள் சக்தி வெற்றிபெறும் என்ற தெளிவான தீர்மானத்தை நாட்டு மக்கள் தற்போது எடுத்துள்ளனர். இந்தப் பிளவுக் கோட்டை அங்கீகரிக்க வேண்டும் என்று நான் கோருகிறேன்.
இந்நாட்டு மக்கள் பெரும் பள்ளத்தில் வீழ்ந்துள்ளனர், மக்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளது, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படாத சகாப்தம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் தாய்மாரின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்தும் வளர்ச்சி யுகத்தை செயல்படுத்த SJB தயாராக உள்ளது.
வறுமையை ஒழிக்கும் நோக்கில் இளைஞர்களுக்கு ஒரு மில்லியன் புதிய தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் 24 மாதங்களில் மாதாந்தம் 20000 ரூபா வழங்கப்படும் எனவும் எதிர்கட்சி தலைவர் அப்போது தெரிவித்தார்.