சமூகநல இல்லங்களில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 402 பிள்ளைகள் மீட்பு.
மலேசியக் காவல்துறை சிலாங்கூரிலும் (Selangor) நெகிரி செம்பிலானிலும் (Negri Sembilan) உள்ள சமூகநல இல்லங்களில் துன்புறுத்தலுக்கு ஆளான 402 பிள்ளைகளைக் காப்பாற்றியிருக்கின்றனர்.
சில பிள்ளைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நம்பப்படுகிறது.
காப்பாற்றப்பட்டவர்கள் ஒரு வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று மலேசிய காவல்துறையின் தலைவர் ராஸாருடின் ஹுசேன் (Razarudin Husain) கூறினார்.
அவர்களில் சுமார் 200 பேர் பெண் பிள்ளைகள்.
இல்லங்களைப் பார்த்துக்கொள்ளும் 170 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களில் சமய ஆசிரியர்களும் அடங்குவர் என்று The New Straits Times நாளேடு தெரிவித்தது.
காப்பாற்றப்பட்ட பிள்ளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை வழங்கப்படும் என்று காவல்துறை சொன்னது.