இன்னொரு தொலைக்காட்சி விவாதம் தேவையில்லை: டோனல்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் இன்னொரு தொலைக்காட்சி விவாதம் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
நவம்பர் 5ஆம் தேதி தேர்தலுக்குமுன் இன்னொரு விவாதம் வைத்துக்கொள்ளலாமே என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கேட்கிறார்.
ஏற்கனவே அதிபர் ஜோ பைடன், துணையதிபர் கமலா ஹாரிஸுடன் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்ற திரு டிரம்ப் மூன்றாவது விவாதம் தேவையில்லை என்று கூறிவிட்டார்.
தோற்றவர்களே மீண்டும் போட்டியிட ஆசைப்படுவார்கள் என்று அவர் சொன்னார்.
ABC தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தை 67 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்தனர்.
அந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றதாகப் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
அதிபர் தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவைத் தீர்மானிக்கக்கூடிய சில முக்கிய மாநிலங்களில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.