“இவரா அவர்?” என்று சொல்லும் அளவிற்கு 114 கிலோகிராம் எடையைக் குறைத்த YouTube பிரபலம்
Nikocado Avocado எனும் ஆடவர் Mukbang என்றழைக்கப்படும் உணவு உட்கொள்ளும் காணொளிகளைப் பதிவேற்றம் செய்து YouTube-இல் பிரபலமானார்.
அவருடைய எடையைப் பார்த்து இணையவாசிகள் சிலர் கேலி செய்ததுண்டு.
ஆனால் அவர் அந்தக் கருத்துகளைத் தமக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டார்.
தம்முடைய எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தாலும் அதனை இணையவாசிகளிடம் அவர் காட்டவில்லை.
அந்தக் காலக்கட்டத்தில் அவர் ஏற்கனவே பதிவு செய்த காணொளிகளைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்தார்.
அந்தக் காணொளிகளில் அவர் உடற்பருமனாக இருப்பார்.
ஆனால் 7 மாதங்களில் அவர் 114 கிலோகிராம் எடையைக் குறைத்தார்.
இம்மாதம் (செப்டம்பர்) 7ஆம் தேதி அவர் வெளியிட்ட காணொளி இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
“இவரா அவர்?” என்று சொல்லும் அளவிற்கு அவர் எடையைக் குறைத்தார்.