இரசாயனத் திரவியங்கள் கொண்டு சிதைத்த உடல் பாகங்கள் : சுவிட்சர்லந்து முன்னாள் அழகியின் கொடூரக் கொலை
சுவிட்சர்லந்தைச் சேர்ந்த முன்னாள் அழகி ஒருவர் தமது கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலையுண்ட 38 வயது கிறிஸ்டினா ஜோக்ஸிமோவிச் ( Kristina Joksimovic) மாடல் அழகிகளுக்கான பயிற்றுவிப்பாளராகவும் வேலை செய்துவந்துள்ளார்.
அவர் பாஸலிலுள்ள (Basel) அவரது வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் கொலையுண்டுக் கிடக்கக் காணப்பட்டார். அக்கொலை தொடர்பில் அவரது 41 வயதுக் கணவர் தாமஸ் (Thomas) கைது செய்யப்பட்டார்.
முதலில் தம்மை விடுவிக்குமாறு கோரிய தாமஸ் பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்று 8World செய்தி கூறுகிறது.
தமது மனைவி கிறிஸ்டினா தம்மைக் கத்தியால் தாக்க வந்ததாகவும் அவரிடமிருந்து தற்காத்துக்கொள்ளவே அவரைத் தாம் பதிலுக்குத் தாக்கியதாகவும் தாமஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் கிறிஸ்டினா கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது.
கிறிஸ்டினாவின் சில உடல் பாகங்களை அடையாளம் தெரியாத அளவுக்கு ரசாயனத் திரவியங்கள் கொண்டு தாமஸ் சிதைத்ததாகக் கூறப்படுகிறது. சில உடல் பாகங்கள் சகதியுடன் கலக்கப்பட்டன.
கொலைக்கும் மனநலப் பாதிப்புக்கும் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அக்கொலை தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.