2 கோடி 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத் தூளை கொண்டு வந்த நபர் கட்டுநாயக்கவில் கைது.

2 கோடி 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கப் பொடிகளை (Gold Power) சட்டவிரோதமான முறையில் கடத்தி வந்த விமானப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நேற்று (13) பிற்பகல் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நீர்கொழும்பில் வசிக்கும் 37 வயதுடைய வர்த்தகர் ஆவார்.

துபாயில் இருந்து இந்தியாவின் மும்பைக்கு வந்தடைந்த அவர், அங்கிருந்து 6E-1185 என்ற Indigo Airlines விமானத்தில் மதியம் 12.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

01 கிலோ 460 கிராம் எடையுள்ள இந்த தங்கப் பொடியுடன் அவர் வந்துள்ளார், இது தயாரிக்கப்பட்டு தனது காற்சட்டை இடுப்பு பெல்ட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது.

தற்போது குறித்த நபர் சுங்க பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.