தேர்தல் பேரணிகளுக்கு 1500 முதல் 3000 வரையான கட்டணத்தில் ஆட்களை வழங்கும் “மேன் பவர்” ஏஜென்சிகள்.
தேர்தல் பேரணிகளுக்கு கூட்டத்தை வழங்க “மேன் பவர்” ஏஜென்சிகள் உருவாகியுள்ளன… பிரதான வேட்பாளரின் பேரணிக்கு ஆளுக்கு 3000… இரண்டாம் நிலை வேட்பாளருக்கு 1500… முன்னாள் நீதியமைச்சர் வெளியிட்ட தகவல்…
தேர்தலை இலக்காகக் கொண்டு தேவந்தர துடுவ தொடக்கம் பேதுரு துடுவ வரை எங்கும் தேர்தல் கூட்டங்களை நடத்துவதற்கு ஆட்களை வழங்கும் புதிய “மேன் பவர்” பிரச்சார ஏஜென்சிகள் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (13) காலை மல்வத்தை மகா விகாரைக்கு சென்ற மல்வத்து மகாநாயக்க தேரர் முன்னிலையில் முன்னாள் நீதியமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கூட்டம் நடைபெறும் இடத்திற்கேற்ப ஒருவருக்கு அறவிடப்படும் விலைகள் மாறுபடும் எனவும், பொதுவாக கொழும்பைச் சுற்றியுள்ள கூட்டத்திற்கு ஒரு பிரதான வேட்பாளர் கூட்டத்தில் நீண்ட நேரம் இருக்க வேண்டுமானால் 3000 ரூபாவும், மற்றொரு பொது வேட்பாளரின் குறுகிய கூட்டத்திற்கு 1500 ரூபாவும் அறவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
1000 முதல் 5000 பேர் வரையிலான தேர்தல் பேரணிகளுக்கு வழங்குவதற்கான கட்டளைகளை இந்த “மேன் பவர்” ஏஜென்சிகள் ஏற்றுக்கொள்கின்றன என்றும் முன்னாள் நீதி அமைச்சர் மல்வத்து மகாநாயக்க தேரரிடம் தெரிவித்தார்.