காரில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.2,000 நோட்டுகள் எரிந்து நாசம்

திருப்பத்தூர் அருகே கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் போலி நோட்டுகள் வைக்கப்பட்டு இருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் அபி நரசிம்மன். தேன் வியாபாரியான இவர், திருப்பத்தூர் மாவட்டம் பயனப்பள்ளி அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் திடீரென தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் கார் எரிந்து சேதமானது. இந்நிலையில் அவரது காரில் 2,000 ரூபாய் போலி நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது தெரியவந்துள்ளது.

இதனிடையே, கொலைகாரன்பேட்டை என்ற திரைப்படத்தை, தான் தயாரித்து வருவதாகவும் ஷூட்டிங்கிற்காகவே போலி நோட்டுகளை வைத்திருந்ததாகவும் அபி நரசிம்மன் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.