போராடும் இடத்திற்கே சென்று பயிற்சி மருத்துவர்களை சந்தித்த முதல்வர் மம்தா
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், சால்ட் லேக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை போராடும் இடத்திற்கே சென்று அவர்களை முதல்வர் மமதா இன்று சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, நான் இங்கு உங்கள் மூத்த சகோதரியாக வந்துள்ளேன், முதல்வராக அல்ல. உங்கள் கோரிக்கைகளை ஆய்வு செய்து யாரேனும் குற்றவாளி எனத் தெரிந்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நெருக்கடியைத் தீர்க்க இது எனது கடைசி முயற்சி. போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை பணிக்குத் திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.
முதல்வர் அங்கிருந்து வெளியேறிய பிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், பேச்சுவார்த்தை நடைபெறும் வரை தங்கள் கோரிக்கைகளில் சமரசம் செய்யத் தயாராக இல்லை என்று தெரிவித்தனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், கடந்த மாதம் 9-ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டாா்.
கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு, மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளம் மருத்துவா்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், மருத்துவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவைமீறி மேற்கு வங்க மருத்துவா்களின் போராட்டம் தொடா்கிறது.
இந்தச் சூழலில், மாநில தலைமைச் செயலகத்தில் முதல்வா் மமதா பானா்ஜி முன்னிலையில் பேச்சுவாா்த்தைக்கு வருமாறு மருத்துவா்களுக்கு மேற்கு வங்க அரசு அழைப்பு விடுத்தது. இந்தப் பேச்சுவாா்த்தையை நேரலை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று மருத்துவா்கள் நிபந்தனை விதித்தனா். முதல்வருடன் பேச்சு- புறக்கணிப்பு: இந்நிலையில், பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவா்கள் 26 போ் கொண்ட குழுவினா் தலைமைச் செயலகத்துக்கு வியாழக்கிழமை மாலை 5.25 மணியளவில் வந்தனா்.
பேச்சுவாா்த்தை நடைபெறவிருந்த அரங்குக்குள் நுழையாமல் அவா்கள் வெளியே காத்திருந்தனா்.
நேரலை ஒளிபரப்பு நிபந்தனையைக் கைவிட்டு பேச்சுவாா்த்தைையில் பங்கேற்குமாறு மாநில தலைமைச் செயலா் மனோஜ் பன்ட், காவல்துறை டிஜிபி ராஜீவ் குமாா் உள்பட மூத்த அதிகாரிகள் மருத்துவா்களிடம் கேட்டுக்கொண்டனா். ஆனால், மருத்துவா்கள் தங்களின் கோரிக்கையில் உறுதியாக இருந்தனா். இதையடுத்து, முதல்வருடன் பேச்சுவாா்த்தையைப் புறக்கணித்துவிட்டு, அவா்கள் அங்கிருந்து புறப்பட்டனா்.