விவாதம் செய்வோம் என்றார் அனுர… ஏற்றுக்கொண்டேன்… ஆனால் அழைப்பு இல்லை… அழைப்பிற்காக காத்திருக்கிறேன் என்கிறார் ரணில்.

அநுரகுமார திஸாநாயக்க தன்னை விவாதத்திற்கு அழைத்த போது அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் இதுவரை தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களை வழங்குவது, காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு மூன்று வருடங்களில் தீர்வு காண்பது, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பிலும் அவர் உறுதியளித்தார்.

உரையின் போது ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

“முன்னாள் அமைச்சர் அனுரகுமார திஸாநாயக்க விவாதம் செய்வோம் என்றார். நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் அழைப்பு இல்லை. அதாவது இதற்கு பதில் சொல்ல முடியாது.

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பற்றி நான் பேசப்போவதில்லை. ஏனென்றால் அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் மேடையில் ஏறினால், இலவசமாக கொடுக்கிறார். தலையிடி மட்டுமே இலவசமாக கொடுப்பது மீதியாக உள்ளது.
இரண்டு பேருமே சரியான தீர்வுகளை வழங்குவதில்லை. அதனால் தான் தீர்வுகளை வழங்க வந்துள்ளேன். நினைவில் கொள்க கேஸ் சிலிண்டரின் முன் புள்ளடி இடுங்கள். இல்லையெனில், வாயு இருக்காது. யாழ்ப்பாணமும் கூட இருக்காது.” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.