ரணில் நாடாளுமன்றத்தை 21ஆம் திகதி இரவு கலைத்துவிடும் அபாயம் உள்ளது : அனுரகுமார
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் வாக்களிப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட புதிய ஜனாதிபதியே நாட்டை ஆள்வதற்கு அரசியலமைப்பில் ஏற்பாடுகள் உள்ளதாக நேற்றைய தினம் தொலைக்காட்சி உரையாடலில் கலந்து கொண்ட அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்தநிலையில் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தற்போதைய ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு ரீதியாக அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பதற்கு அதிகாரம் உள்ளதாகவும், அவர் அந்த தீர்மானத்தை எடுத்தால், அது மக்களுக்கும் நாட்டுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும் தெரிவித்தார்.
ஜனநாயக கட்டமைப்பிற்குள் தெரிவு செய்யப்படும் புதிய ஜனாதிபதிக்கு அதிகாரம் மாற்றப்படுவது மக்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாத வகையில் ஜனநாயக ரீதியில் நடைபெற வேண்டும் என்பது ஒழுக்க நெறி சமூகத்தின் அடிப்படை எதிர்பார்ப்பு என ஜனாதிபதியின் சட்டத்தரணி குறிப்பிட்டார்.
“அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்.அவ்வாறான சந்தர்ப்பத்தில் புதிய ஜனாதிபதி பின்பற்ற வேண்டிய பல விதிகள் உள்ளன. இருப்பினும், இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார் அவர்.