பயிற்சி மருத்துவர் கொலை விவகாரம் தொடர்பில் இருவர் கைது

இந்தியாவின் கொல்கத்தா நகரில் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரும் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஆதாரத்தை மாற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த மாதம் R.G. Kar மருத்துவக் கல்லூரியில் 31 வயதுப் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். அவர் பின்னர் கொலை செய்யப்பட்டார்.

அவருடைய உடல் கல்லூரியில் கண்டுபிடிக்கப்பட்டது.

பெண்களுக்குக் கூடுதல் பாதுகாப்புக் கோரி நாடு முழுவதும் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் (Sandip Ghosh) ஏற்கெனவே ஊழல் செய்த சந்தேகத்தின்பேரில் தடுப்புக்காவலில் உள்ளார்.

அவர் மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பயிற்சி மருத்துவரின் மரணத்தைத் தாமதமாக அறிவித்தது, முக்கிய அறிக்கை சமர்ப்பிப்பதைத் தள்ளிப்போட்டது அவற்றுள் அடங்கும்.

குற்றம் நடந்த இடத்தைப் பாதுகாக்கத் தவறிய சந்தேகத்தின்பேரில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி அபிஜிட் மொண்டல் (Abhijit Mondal) கைதானார்.

Leave A Reply

Your email address will not be published.