360க்கு வருவதாக சொல்லிவிட்டு வராமல் விட்ட சஜித் : ரணில் வருவாரா நாளை ? (Video)

தெரண தொலைக்காட்சியில் இன்று (17) நடைபெறவிருந்த 360 நேரடி நிகழ்ச்சியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கேற்கவில்லை.

இந்த நிகழ்வில் தான் பங்கேற்பதை சில நாட்களாக உறுதி செய்திருந்ததாகவும், திடீரென இன்று காலை அதில் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டதாகவும் தெரண சேனல் குறிப்பிட்டுள்ளது.

அதன் காரணமாக திடீரென வாதபிட்டிய என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

நாளை (18) தெரண சேனலின் 360 நிகழ்ச்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெறவுள்ளதாகவும் அவர் அதில் பங்கேற்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரண அலைவரிசை மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.