குறைந்த வரியுடன் வாகனங்களை இறக்குமதி செய்ய தயார்..- அனுர

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரி குறைப்பு தொடர்பில் தற்போதைக்கு குறிப்பிட்ட கருத்தை வெளியிட முடியாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முதலில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும், எனவே முதலில் தெரிவு செய்யப்பட்ட சில வகைகளின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்பிறகு, நியாயமான விலையில் வாகனங்களை வாங்குவதற்கு வரிகளில் மாற்றம் செய்வது குறித்து யோசித்து வருவதாகக் கூறுகிறார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.