ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறினார்!
ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு நாள் எஞ்சியுள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ , இன்று (20) அதிகாலை வெளிநாடு சென்றார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான EK 659 இல் அவர் டுபாய்க்கு வழியாக அமெரிக்கா செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிறுவனத்தின் கோல்ட் ரூட் ஸ்பெஷல் என்ட்ரியின் ஊடாக முன்னாள் அமைச்சர் பிரவேசித்து தனியாக பயணித்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க, பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதசிரிமான்ன மற்றும் ஜயநாத கெட்டகொட ஆகியோருடன் ராஜபக்ஷவும் விமான நிலையத்துக்கு வந்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் கணிசமான பங்கை வகித்த பின் வெளிநாடு சென்றுள்ளார்.