யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது
யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்! – துணைவேந்தரின் வாக்குறுதியையடுத்து கைவிடப்பட்டது
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2ஆம் – 3ஆம் வருட மாணவர்களுக்கிடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மாணவர்கள் பல்கலைகழக நிர்வாகத்தை நாடிப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க முயன்றபோது காவலாளியும் விரிவுரையாளர்கள் சிலரும் இணைந்து தம் மீது தாக்குதல் நடத்தினர் என்று மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் பல்கலைகழக வாயிலில் போராட்டம் நடத்திய மாணவர்கள், “எங்களை அடிப்பதற்கான உரிமையை யார் கொடுத்தது?”, “காட்டுமிராண்டிகள்போல் மாணவர்களுடன் நடந்து கொண்டவர்களுக்குத் தண்டணை வழங்கப்பட வேண்டும்” என்று கோஷமிட்டனர்.
இதையடுத்துப் பல்கலைக்கழக வளாகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக நாளை யாழ். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் மூலம் விசாரணை நடத்தப்படும் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா உறுதியளித்ததன் பிரகாரம் மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.