2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் கூட்டமைப்பின் 4-ஆவது உச்சிமாநாடு, அமெரிக்காவின் டெலாவா் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நடைபெற்றது.

மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, “3-ஆவது முறையாக நான் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், க்வாட் மாநாட்டில் பங்கேற்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. க்வாட் முதல் உச்சி மாநாடு முதன்முறையாக 2021-இல் உங்கள்(பைடன்) தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், குறுகிய காலத்தில் நம் ஒத்துழைப்பை ஒவ்வொரு திசையில் விரிவுபடுத்தியுள்ளோம்”.

“அதிபர் பைடன் உள்பட அனைத்து தலைவர்களுக்கும் வாழ்த்துகள். 2025-இல் க்வாட் தலைவர்கள் உச்சிமாநாட்டை இந்தியாவில் நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.