ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியை பொதுக் கூட்டணி ஒன்றை அமைக்க அழைக்கவுள்ளது

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணியை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள ஆகியோருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரால் ஐக்கிய மக்கள் சக்தியை அழைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் அரசியல் சூழலுக்கு முகங்கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய பொதுக் கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் இன்று (23) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபைக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.